தொடரும் போராட்டம்.! Swiggy ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்…

தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, ஸ்விக்கி ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும். 1 கிலோ மீட்டருக்கு 10 வழங்க வேண்டும், பழைய ஊதிய முறையைத் தொடரவேண்டும்.

அதாவது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த ‘டர்ன் ஒவர்’ என்ற தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவு வாங்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.