விக்ரம் ரசிகர்களுக்கு “துருவ நட்சத்திரம்” படத்தின் சூப்பர் அப்டேட்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில்  ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என கூறலாம். கடந்த 2017-ஆம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் தொடர் கமிட்மெண்ட்களால், படம் நீண்ட நாட்களாக தள்ளி செல்கிறது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விக்ரம் இந்த வாரம் படத்தின் இப்படத்தின் டப்பிங்கை பணிகளை முடிப்பார் என்றும், படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுடன் விரைவில் முழு வீச்சில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அனைத்தும் முடிந்த பிறகு வரும் ஜூலை மாதம் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.