ஆகஸ்ட் முதல் வாரத்தில் வலிமை டீசர்..?

வலிமை திரைப்படத்தின் டீசரை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியீடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார்  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியானது . வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தற்போது கிடைத்த தகவல் படத்தின் டீசர் குறித்து கிடைத்துள்ளது. அதாவது வலிமை திரைப்படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியீடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.