31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

SRH vs LSG: கிளாசன், சமத் அதிரடி பேட்டிங்… லக்னோ வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs LSG போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 182/6 ரன்கள் குவிப்பு.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இருபோட்டிகள் நடைபெறுகிற நிலையில் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அமோகம் ஹைதராபாத்தின் ராஜூவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, இதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு வீரர் அன்மோல்பிரீத் சிங் 36 ரன்கள் குவித்தார். முக்கிய வீரர்கள் பெரிதும் நிலைத்து நின்று ஆடாமல் சிறிது நேரத்தில் விக்கெட்களை இழந்தனர்.

திரிபாதி(20), மார்க்ரம்(28) மற்றும் கிளென் பிலிப்ஸ்(0) ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹென்ரிச் கிளாசன்(47 ரன்கள்) மற்றும் அப்துல் சமத்(37* ரன்கள்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முடிவில் SRH அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பில் க்ருனால் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.