செப். 12 முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. முன்பதிவு எப்போது.?

இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது உள்ள 230 ரயில்களுக்கு கூடுதலாக 80 புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தலைவர் நேற்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தேர்வு மற்றும் பிற முக்கிய காரணங்களுக்காக இந்திய மாநிலங்களின் தேவையைப் பொறுத்து ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இந்திய ரயில்வே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒருசில மாநிலங்களில் பயணிகள் ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சிறப்பு ரயில்களை ரயில்வே வாரியம் இயக்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்தார். அதற்கான முன்பதிவு, வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.