சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்க சிறப்பு திட்டம் – மேயர் பிரியா அறிவிப்பு.!

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.

சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ரூ.1.35 கோடி மதிப்பில் 5 வாகனங்களும், நாய்களை பிடிக்க  ரூ.60 லட்சம் மதிப்பில் 6 புதிய வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு நவீன வெக்டார் கன்ட்ரோல் கருவிகள் வழங்கப்படும் எனவும், தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, முக்கிய நகரப் பகுதிகளில் அதிக மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment