நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை கணக்கெடுப்பு..!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி, மாணவர்களுக்கு தொழில் தேர்வுகளில் வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக சோனு சூட்டை அறிவித்தது.

இந்நிலையில் தற்போது  மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டின் வீடு உட்பட ஆறு இடங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், நடிகர் சோனு சூட் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால் இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.