வருகிறது அபூர்வ சூரியகிரணம்…!தமிழகத்தில் 10 மாவட்டங்களில் தென்படும்..!

  • டிச.,26 தேதி சூரிய கிரணம் நடைபெறுகிறது.இது மிகவும் அபூர்வ சூரிய கிரணம் ஆகும்
  • தமிழகத்தில் 10 மாவட்டங்களில் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய கிரணம் என்பது சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் நேர்கோட்டில்  சந்திரன் வரும் போது சூரியன் மறைக்கப்படும் அப்போது சந்திரனின் நிழல் பூமியில் விழும் நிகழ்வே சூரிய கிரணம் ஆனால் இந்தாண்டு நிகழும் சூரியகிரணம் சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.

Related image

காரணம் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் ஒரு வளையம் போல ஒளியாக காட்சியளிக்கும் இது வளைய சூரியகிரணம் எனபடும் அந்த வளைய சூரிய கிரணம் தான் டிச.,26 ந் தேதி தற்போது நடைபெற உள்ளது.

Image result for சூரிய கிரகணம்

இந்த சூரியகிரணம் ஆனது இந்தியாவிலும்,கர்நாடக மாநில தென்பகுதியிலும்,கேரளா உள்ளிட்ட பகுதியிலும்  பார்க்க முடியும்.கிரணம் ஆனது காலை 8 மணி முதல் 11.16  மணி வரை நடைபெறகிறது.குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு,திருச்சி,நீலகிரி, திருப்பூர்,திண்டுக்கல்,கரூர்,சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய  10 மாவட்டகளில் சூரிய கிரணம் முழுமையாக தெரியும்.இதற்காக தமிழ்நாட்டில் 11 இடங்களில் விஞ்ஞான் பிரச்சார்,அறிவியல் பலகை ஆகியவற்றை கணித அறிவியல் நிறுவனம் மற்றும்தமிழ்நாடு அறிவியல் தொழிட்நுட்பம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.மேலும் இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி டி.வி வேங்கடேஷன் தெரிவிக்கையில் சூரிய கிரணத்தை யாரும் வெறும் கண்னால் பார்க்க கூடாது. அதற்காக இருக்கும் பிரத்தியேக கண்ணாடி வழியாக பார்ப்பதே மிகவும் சரியானது சென்னையிலும் பகுதியாக கிரணம் தெரிவதால்  அதனை மக்கள் பார்ப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

author avatar
Kaliraj