சிங்கார சென்னை 2.0 திட்டம்: சாலைகளை மறுசீரமைக்க ரூ.55.61 கோடி ஒதுக்கீடு.!

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா தனது பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் ” சிங்கார சென்னை 2.0 நிதி – தமிழ்நாடு அரசின் நிதியான சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கும், சாலை, வடிகால், விளக்குகள், குளம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், இந்த நிதியாண்டில், சிங்காரசென்னை2.0 திட்டத்தின் கீழ், 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78.01கிமீ நீளத்திற்கு ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகர்புற சாலைகள் மேம்பட்டு திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் நிதியாண்டில், சென்னை மாநகரில் 425.51 கிமீ நீளத்திற்கு 2,687 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தும் பணிகள் ரூ.327.63 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவும், இப்புதிய சாலைத்திட்டத்தில், நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கல் தூண் தடுப்புகள் அமைக்கப்படும்” மேயர் பிரிய அறிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment