எளிதாக்கப்பட்ட இ-பாஸ் முறை.! வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிப்பு.!

இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை மட்டும் மட்டும் ஒரே நாளில் 1.20லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நெல்லையின் மாவட்ட எல்லையான கங்கை கொண்டானில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் பெற்று தான் வாகனங்கள் வருகிறதா என்று சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இபாஸ் முறை எளிதாக்கப்படுவதற்கு முன்பு ஒரு நாளில் 100 வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 300 வாகனங்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.