சுருக்குமடி வலை விவகாரம்- மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சுருக்குமடி வலை விவாகரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது சிரமம் என மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் 12மைல் தொலைவு தூரம் சென்று மீன்கள் பிடித்துக்கொள்ளலாம் என அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவது என்பது சாத்தியமில்லை அது மிகவும் சிரமம் என்று, மீனவர்கள் தரப்பில் மேலும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலுக்குள் காலை 8 மணிக்கு சென்று மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவளித்திருந்தது, இந்த உத்தரவும் பின்பற்ற சாத்தியமில்லை என மீனவர் தரப்பினர் கூறியிருக்கின்றனர்.

12மைல் தூரம் கடலில் சென்று மீன்பிடிப்பது சிரமம், மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சென்று கடலில் மீன்பிடிப்பது என்பதும் நடைமுறையில் இயலாத காரியம் என்றும் மீனவர்கள் தரப்பில் கூறிவருவதால், அதனை உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளனர். உத்தரவு பின்பற்ற முடியாததாக இருப்பதால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment