அதிர்ச்சி செய்தி.! நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்.!

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் நேற்றிரவு மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் நடித்த காமெடி காட்சிகள் இன்னும் ரசிகர்களின் மனதில் இருக்கிறது.

இந்நிலையில், 67 வயதாகும் நடிகர் சிவநாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் நேற்று இரவு  உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறுகிறது. இவரது மனைவி பெயர் புஷ்பவல்லி இவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். 

இவரது திடீர் மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனையடுத்து திரைத்துறையினரும், ரசிகர்களும் இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment