தினமும் 12 முதல் 13 பீர்…மரணத்தை கலாபவன் மணியே தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல்!

தமிழில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி, 2016 ல் தனது 45 வது வயதில் உயிரிழந்தார். நடிகர் மணியின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது.

இந்நிலையில், நடிகர் கலாபவன் மணி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த கேரள ஐபிஎஸ் பி.என் உன்னிராஜன், கலாபவன் மணி தினசரி 12-13 பாட்டில் பீர் குடித்ததே மரணத்துக்கு காரணம் என கூறி நடிகரின் மர்ம மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விசாரணை தொடங்கியதில், அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் மீட்டு, மேலும் மரணத்திற்கு முன்பு அவரை சந்திக்க வந்த அவரது நண்பர்கள் மற்றும் நடிகர்கள் ஜாபர் இடுக்கி, தரிகிடா சாபு மற்றும் பலர் உட்பட அங்கு இருந்த அனைவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

வெறும் 2 நாளில் ரூ.100 கோடி…சல்மான் கானின் புதிய சாதனை!

பின்பு, அவருக்கு தீராத நீரிழிவு நோயாளி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீரிழிவு நோய்க்கான மாத்திரையை சாப்பிடுவார் என்றும், இந்த நோயிக்காக தேர்வு காண மருத்துவரை சந்தித்ததில் மருத்துவர், இனிமேல் மது அருந்த கூடாது என்றும், அப்படி மீறி அருந்தினால் உயிரிருக்கே ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணிக்கு நாளடைவில் கல்லீரல் செயலிழந்துள்ளது. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், அவர் பீர் குடிப்பதை கைவிடவில்லை. மரணமடைந்த 2016 மார்ச் 6ம் தேதியும் அவர் 12 பாட்டில் பீர் குடித்ததாகவும் அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!

பொதுவாக, மதுபானம் உட்கொள்ளும் போது, அதில் மெத்தி ஆல்கஹாலின் சுவடு இருக்கும். ஆனால், அதுவே 100 மில்லி இரத்தத்தில் மெத்தில் ஆல்கஹாலின் அளவு 30 மில்லிக்கு மேல் இருந்தால், அது உயிருக்கு ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இவ்வாறு தனது மரணத்தை அவரே தேடிக் கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.