,

கோழிக் கறிக்கு ஏற்பட்ட தகராறில் மகனைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்.!

By

கர்நாடகா: தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவதற்காக ஏற்பட்ட தகராரில் ஆத்திரமடைந்த தந்தை, கனமான மரக்கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்புகுதியை அதிர்ச்சையடைய செய்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்ரமணியம் போலீசார், கொலை செய்த தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை தக்ஷின கன்னடா மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் உள்ள குட்டிகர் என்ற இடத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் விசாரித்த போது,  உயிரிழநத சிவராமின் தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டில் சமைத்த கோழி கறியை உண்டதால், தந்தையுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தந்தை சிவராமை மரத்தடியால் தாக்கி கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

Dinasuvadu Media @2023