15,783,712.50 ரூபாய்க்கு சீனர்களின் விபரங்கள் விற்பனை; 10 பிட்காயின் போதும் ஹேக்கர் அட்டகாசம் !

ஒரு பில்லியன் சீன குடிமக்களிடம்  தனிப்பட்ட தகவல்களைப் ஷாங்காய் காவல்துறையிடமிருந்து பெற்றதாக ஹேக்கர் ஒருவர் கூறியுள்ளார்.இது உண்மை என்றால் வரலாற்றில் மிகப்பெரிய தகவல் திருட்டில் ஒன்றாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 இல், ஷாங்காய் தேசிய காவல்துறையின்  (SHGA) டேட்டாபேஸ் கசிந்தது.இதில் பல டெராபைட் (TB) தரவுகள் மற்றும் பில்லியன் கணக்கான சீன குடிமக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த தரவுகளில்  1 பில்லியன் சீன தேசிய குடிமக்கள் மற்றும் பல பில்லியன் வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்ளது. பெயர், முகவரி, பிறந்த இடம், தேசிய அடையாள எண், மொபைல் எண், அனைத்து குற்றம்/வழக்கு விவரங்கள் உள்ளன.

அந்த ஹேக்கர் 23 டெராபைட் (TB) விவரங்களை 10 பிட்காயினுக்கு அதாவது $200,000 க்கு விற்க முன்வந்தபொழுது இதுபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment