,
gold PRICE

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

By

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரன் ரூ.640 வரை கடுமையாக உயர்ந்த நிலையில், ஏறிய வேகத்திலேயே இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (22-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.6,695க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து கிராம் ரூ.96.50க்கும், கிலோ ரூ.96,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (21-06-2024)22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,780க்கு விற்பனையானது. அதே நேரம், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.40 பைசா உயர்ந்து ரூ.98.50-க்கும் கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023