ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’..??

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல்

நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானாடி, சபாபதி ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இதில் சபாபதி திரைப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.