பிக்பாஸ் சீசன் 4-இல் கமலுடன் பணியாற்றிய சாண்டி.! வைராலாகும் புகைப்படங்கள்.!

பிக்பாஸ் சீசன் 4ல் கமல்ஹாசன் அவர்களுக்கு சாண்டி அவர்கள் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. நேற்றைய தினம் உலகநாயகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸில் தோன்றும் சில காட்சிகளுடன் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோவை வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் ஆரம்பத்தில் கமல்ஹாசன் அவர்கள் நடனமாடி கொண்டே வீட்டினுள் என்ட்ரி கொடுப்பார். அந்த நடனத்தை பிரபல நடன இயக்குனரும், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டி அவர்கள் தான் கமல்ஹாசன் அவர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்து சொல்லிக் கொடுத்துள்ளார். அதனை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கமல் அவர்களுடன் மீண்டும் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றும், அவருடைய சினிமா அறிவு மற்றும் திறமையை அளவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.