ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி “ஸ்பூட்னிக் V” புழக்கத்திற்கு வந்துவிட்டதா.?

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி  இப்போது ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசியை பொது விநியோகத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும், விரைவில் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், ரஷ்யா தலைநகரின் மாஸ்கோவில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி முதல் கட்டமாக புழக்கத்திற்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.