கஜா புயல் நிவாரண பணி…!ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு…!விவசாயத்துறைக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு….!

கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது.

Image result for gaja flood

மேலும் மக்கள் மின்சாரமின்றி அன்றாட தேவைகளின்றி தவித்து வருகின்றனர்.இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் கஜா புயல் குறித்த அலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

அதில்   உயிரிழப்பு, கால்நடை, உடைமைகளுக்காக ₹ 205.87 கோடியும் , வீடுகள் சேதம் – ₹100 கோடியும்,  பயிர் சேதம் – ₹350 கோடியும்,  சாலை, குடிநீர் உட்பட உள்கட்டமைப்பு – ₹102.5 கோடியும், மீன்வளம் – ₹41.63 கோடியும், மின்சாரம் – ₹200கோடியும், மொத்தம்- ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment