ரோஜா பட ஹீரோவிற்கு இவ்வளவு பெரிய மகனா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரோஜா படத்தில் நடித்த அரவிந்த் சாமியின் மகனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் தளபதி மற்றும் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இவருக்கு ரோஜா படத்திற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். அதனையடுத்து ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்தின் மூலம் சினிமாயுலகில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படமான ‘தலைவி’ படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்திலும், புலனாய்வு படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரின் மகனான ருத்ர சாமியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு இன்றும் யங்காக உள்ள இவரது மகனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஷாக்கில் உள்ளார்களாம்.