பாதியில் போனாலும் பல லட்சங்களை அள்ளிய ‘டார்லிங்’ ராபர்ட் மாஸ்டர்.! வியப்பூட்டிய பிரமாண்ட சம்பளம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முன்பு நிவாஷினி வீட்டிலிருந்து வெளியேறினார்.

Robert Master
Robert Master [Image Source: Twitter ]

அவரை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலருக்கு பேவரட்டாக இருந்த ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இதையும் படியுங்களேன்- குத்தாட்டத்திற்கு ஊ சொன்ன ‘ஹாட்’ ஹீரோயின்ஸ்.. சமந்தா முதல் ஆண்ட்ரியா வரை டாப் லிஸ்ட் இதோ…

RobertMaster
RobertMaster [Image Source: Twitter ]

வீட்டிற்குள் அனைவரிடமும் பாசத்துடன் டார்லிங்..டார்லிங் என அழைத்து ஜாலியாக விளையாடி வந்த ராபர்ட் மாஸ்டர் கடந்த வாரத்திலிருந்து சரியாக விளையாடவில்லை என்பதால் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மற்றோரு பிக் பாஸ் போட்டியாளரான அசல் கொலாரை சந்தித்தார்.

RobertMaster And Kolaaru
RobertMaster And Kolaaru [Image Source: Twitter ]

இந்நிலையில், தற்போது 50 நாட்கள் வீட்டிலிருந்து பிறகு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் 50 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு அவருக்கு சம்பளமாக 25-ஆயிரம் பேசப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருக்கு 50 நாட்களுக்கு சம்பளமாக 12,50,000 கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மாஸ்டருக்கு பல படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment