விஜயகாந்த் மறைவு: கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்.!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக நேற்றய தினம்கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இதைதொடர்ந்து,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

பிறகு தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்..!

அவரது மறைவுச் செய்தியை தாங்க முடியாத மக்கள் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு கூட்டம், கூட்டமாக சென்று நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள், கேப்டன் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் தங்களது கடைகளை அடைத்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.