கடைசி நேரத்தில் அலெக்ஸாண்டர் படத்திற்கு வந்த பிரச்சனை..2 நாள் தூங்காமல் கேப்டன் விஜயகாந்த் செஞ்ச விஷயம்!

Vijayakanth : அலெக்ஸாண்டர் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கலை விஜயகாந்த் தீர்த்து வைத்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த் படங்களில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் அவருடன் படங்களில் நடித்த போது படப்பிடிப்பு தளங்களில் நடந்த சம்பவம் பற்றியும் நடிகர்கள், நடிகைகள் பேசுவது உண்டு. அப்படி தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பு பஞ்சு அருணாசலம் அலெக்ஸாண்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இது குறித்து பேசி அவர் அலெக்ஸாண்டர் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு முறை இரண்டு நாட்கள் விஜயகாந்த் தூங்காமலே வேலை செய்தார். அதற்கு காரணமே படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதுதான். ஏனென்றால் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் பாக்கி இருந்தது. நாங்கள் படம் ஆரம்பிக்கும் போதே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம்.

கிளைமாக்ஸ் காட்சி ஒரு காட்சி தானே என்று சில நாட்கள் தள்ளிக்கொண்டே சென்று போனது. அதன் பிறகு மழைக்காலம் தொடங்கியது எனவே கிளைமாக்ஸ் காட்சி பீச் ஓரமாக எடுக்க வேண்டி இருந்தது எனவே சரியாக கிளைமாக்ஸ் காட்சி எடுக்க சென்றாள் கேமரா வைத்த அந்த நாளே மழை பெய்து விடும். இப்படியே சில நாட்கள் கடந்து கடந்து சென்றது.

எனவே படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 14 நாட்கள் இருந்த  நிலையில் கண்டிப்பாக இந்த கிளைமாக்ஸ் கட்சியை சூட் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம். அந்த சமயம் பிரகாஷ்ராஜ் மற்றும் படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களுக்கு கால் சீட்டும் சரியாக கிடைக்கவில்லை. அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் எப்படியோ பேசி கால் சீட் வாங்கி இரண்டு நாட்கள் அவர்களை நடிக்க வைத்தார்.

அந்த இரண்டு நாட்களும் கேப்டன் விஜயகாந்த் தூங்காமலே வேலை செய்துகொண்டிருந்தார்.  கேப்டன் மட்டும் அப்படி தூங்காமல் வேலை செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த படத்தின் வேலை சீக்கிரமாக முடிந்திருக்குமா என்பது சந்தேகம் தான்” எனவும் சுப்பு பஞ்சு அருணாசலம் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.