வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படம் சிம்புவின் 47-வது படம். படத்தில் தாமரை பாடல்கள் எழுதுகிறார்.  டத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் மூலம் சிம்பு -கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதுவரை இல்லாத விதமாக சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததால், படம் எப்படி பட்ட படம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவும் என்று வேல்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment