ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்தி காந்த தாஸ்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

பணவியல் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு சக்தி காந்ததாஸ் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, முக்கிய கடன் விகிதங்களான ரெப்போ வீதம் மற்றும்  ரிவர்ஸ் ரெப்போ ரெப்போ வீதம் மாறாமல் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையைப் பின்பற்றவும்,  ரிவர்ஸ் ரெப்போ வீதமும் மாறாமல் 3.35 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மே மாதம் நடைபெற்ற முந்தைய கூட்டத்தில், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 4 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்திருந்தது. அதே நேரத்தில் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் ஒரே நேரத்தில் 3.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.