38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

சூப்பரா இருக்கே…வடிவேலு குரலில் உருகவைக்கும் மாமன்னன் படத்தின் ‘ராசாகண்ணு’ பாடல்.!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Maamannan movie
Maamannan movie [Image Source : Twitter / @sivakar88019407 ]
இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடபட்ட நிலையில், இன்று படத்தின் முதல் பாடலான ‘ராசாகண்ணு’ என்ற பாடல் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளார். பாடலை கேட்ட பலரும் ஆஹா சூப்பரா இருக்கே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.