16 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினி கமல்..!! அண்ணாத்த VS விக்ரம்..??

அண்ணாத்த திரைப்படமும் விக்ரம் திரைப்படமும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் ரஜினி தற்போது இய்குனார் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார். இந்த நிலையில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிந்த விடும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து படத்தின் டைட்டில் டீசரை தவிர்த்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான ரிலீஸ் தேதியை மற்றும் படக்குழுவினர் அறிவித்தனர். ஆம் வருகின்ற தீபாவளி தினத்தன்று இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இதை போல் நடிகர் கமல் ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த விக்ரம் திரைப்படமும் வருகின்ற தீபாவளி தினதன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் திரைப்படம் ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளதால் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதற்கு முன்பு கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் மற்றும் ரஜினி நடித்த சந்திரமுகி படத்துடன் 2005 ஆம் ஆண்டு ஒரே தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.