Categories: இந்தியா

ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு !

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி  ரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ரயில்களில், வை-பை வசதி மற்றும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

2018-2019ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வேத்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரயில்வே துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனத்துவ மேம்பாடு பணிகளை மேற்கொள்ள, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடம் மின்மயமாக்கப்படும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில், 4 ஆயிரத்து 267 இடங்களில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் வழித்தடங்களில் உள்ள தண்டவாளங்கள், சிக்னல்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 600 பெரிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 25 ஆயிரம் நடைமேம்பால படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் வசதி கொண்டவையாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், படிப்படியாக வை-பை வசதியும், சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

3 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

3 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

3 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

3 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

4 hours ago

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…

4 hours ago