புஷ்பா அப்டேட்.! இன்று வெளியாகும் பஹத் பாசிலின் போஸ்டர்.!

புஷ்பா பஹத் பாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. 

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனரான சுகுமார் இயக்குகிறார்.

படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் பாகம் வரும் டிசம்பர் 25 – ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கும் பஹத் பாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.08 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.