#PuducherryWeatherUpdate : புதுச்சேரியில் வெப்ப நிலை அதிகரிக்கும்…மழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்.!!

மிதமான மழைக்கு வாய்ப்பு 

  • வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலை 

  • மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

  • பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்பவேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புயல் நிலவரம் 

மேலும், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிப்பர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக மாறி வலுப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.