அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

அக்டோபர்-4 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை அண்மையில் யு.பி.எஸ்.சி மாற்றியது. புதிய அட்டவணையின்படி, இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டது.

அந்த அறிக்கையின் படி, தோ்வா்கள் அனைவரும்  முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் இல்லாத மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனிமனித இடைவெளி,போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தோ்வா்கள் தங்கள் சொந்த கை சுத்திகரிப்பானை  கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என ஆணைக்குழு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டின் சிவில் சர்வீசஸ் தேர்வு மே- 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணைக்குழு அக்டோபர்- 4 ஞாயிற்றுக்கிழமை சிவில் சர்வீசஸ் தேர்வை இந்தியா முழுவதும் நடத்தவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.