இன்று முதல்…இந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று  (24-ம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளிகள் வாயிலாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.மேலும்,10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு நேற்று முன்தினம் முதல் விண்ணப்பித்த நிலையில் ஜூன் 29-ம் தேதி இதற்கு கடைசி நாளாகும் என்றும்,பள்ளிகள் மூலம் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

6 mins ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

11 mins ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

18 mins ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

19 mins ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

50 mins ago

மே 1 முதல் தமிழகத்தில் வெப்ப அலை… தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…

52 mins ago