ஈரப்பத நெல் கொள்முதல்; அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!

அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இந்த பிப்ரவரி மாதம் பெய்த மழையால், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் சேதமடைந்த நெல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்ரபாணி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஆய்வுக்கான அறிக்கையை முதல்வரிடம் இன்று சமர்பிக்கின்றனர், இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பாதிப்படைந்த நெல் குறித்த ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஏற்கனவே 22% வரை ஈரப்பதம் அடைந்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வருடன், உணவுத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசின் 22% நெல் கொள்முதல் குறித்த பதில் குறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment