தனியார் 5ஜி நெட்ஒர்க்… ஜியோ-டெஸ்லா பேச்சுவார்த்தை; வெளியான தகவல்.!

டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலைக்கு தனியார் 5ஜி நெட்ஒர்க் உருவாக்க ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகின் முன்னனி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவுடன் இணைந்து, அந்நிறுவனம் இந்தியாவில் அமைக்கும் தொழிற்சாலைக்கு முதல் தனியார் 5ஜி நெட்ஒர்க் உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனத்துடன் இணைந்து, அதன் இந்திய  தொழிற்சாலைக்கு தேவையான தனியார் நெட்ஒர்க்கை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பற்றி ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இறுதிக்கட்ட பணிகள் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை அமைக்கும் பணியை தொடங்கியவுடன் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஜியோ நெட்ஒர்க் டெஸ்லா நிறுவனத்திற்கு தேவையான அனைத்து முக்கியமான செயல்பாடுகளையும் அதிவேகமான டேட்டா வேகத்தில் நிர்வகிக்கும் வகையிலும், பொது நெட்ஒர்க்கில் இது சாத்தியமில்லாமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar