முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்..!

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.  பிரசாந்த் கிஷோர் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில்,  பொது வாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தகட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார். சமீபத்தில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார். இந்த தேர்தலில் இரு கட்சிகளும் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகுவதாகவும், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்தார். இதனால், 2024 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

murugan

Recent Posts

‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…

8 mins ago

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…

13 mins ago

வந்துட்டான்யா.. தமிழ்நாட்டில் நாளை முதல் கத்தரி வெயில் தொடக்கம்! ஒரு மாதம் கொளுத்தும்…

Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…

13 mins ago

எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…

50 mins ago

ஒரே நாளில் ரூ.800 சரிவு.. சவரனுக்கு ரூ.53,000 க்கும் கீழ் சென்ற தங்கம் விலை.!

Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

1 hour ago

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…

1 hour ago