தேசத்தின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லிக்கு நன்றி…!!வாழ்த்துக்கள் கெஜிரி…பாஜகவின் வியூகத்தை உடைத்து எரிந்த பிரசாந்த் கிஷோர் வாழ்த்து

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள மக்களுக்கு நன்றி என்று அக்கட்சிக்காக அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது.இந்நிலையில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில்டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் அக்கட்சிக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர், அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் வல்லவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர்.இவரே இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற, டெல்லிக்கு நன்றி என பதிவிட்டு கூறிள்ளார்.

இந்நிலையில் தான் டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கும் நேரில் சென்ற பிரசாந்த் கிஷோர் மீண்டும் 3 வது முறையாக முதல்வராக  உள்ள கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

kavitha

Recent Posts

அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…

13 mins ago

மோடி புகைப்படம் இல்லை.! கூட்டணி தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்த பாஜக தலைவர்.?

Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…

15 mins ago

புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் !! டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவுப்பு !

Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…

50 mins ago

முதலில் அனுமதி வாங்குங்க இல்லனா நீக்குங்க! ரஜினியின் ‘கூலி’க்கு செக் வைத்த இளையராஜா!

Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

1 hour ago

மத சடங்குகள் இல்லையா.? இந்து திருமணம் செல்லாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!

Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…

1 hour ago

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.! மாத தொடக்க நாளில் சரிவு.!

Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

2 hours ago