,
Georgia vs Portugal

யூரோ2024: படுதோல்வியை சந்தித்த போர்சுகள்..! 2-0 என அபார வெற்றியை பெற்ற ஜார்ஜியா..!

By

யூரோ2024: இந்த ஆண்டில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போர்சுகள் அணியும், ஜார்ஜியா அணியும் ஜெர்மனியில் உள்ள வெல்டின்ஸ்-அரீனா மைதானத்தில் மோதியது.

விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த போட்டியின் ஆரம்பத்தில் 2-வது நிமிடத்திலே ஜார்ஜியா வீரரான குவரட்ஸ்கெலியா அற்புதமான ஒரு கோலை அடித்து அசத்தி இருப்பார். இதன் மூலம் தொடக்கத்திலே போட்டி சூடு பிடிக்க தொடங்கியது.

அதன் பின் ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போர்சுகள் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஒரு பிரீ-கிக் கிடைக்கும் அதனையும் அவர் சரியாக அடித்திருப்பார். ஆனால், கோல் கீப்பர் அபாரமாக அதை தடுத்திருப்பார்.

அதை தொடர்ந்து போட்டியின் முதல் பாதியில் 1-0 என ஜார்ஜியா அணி முன்னிலை பெற்றிருப்பார்கள். அதன் பின் இரண்டாம் பாதியில் 56’வது நிமிடத்தில் ஜார்ஜியா அணிக்கு ஒரு பெனால்டி கிடைத்தது, அதையும் மிகுடாட்ஸே சரியாக பயன்படுத்தி கோலை அடித்து அசத்தியிருப்பார்.

அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிட்டிருப்பார்கள். அதிலும் ரொனால்டோவுக்கு கிடைத்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டிருப்பார். ஆட்ட நேரம் முடிந்தும் 4 நிமிடங்கள் கூடுதல் கொடுத்தும் போர்சுகள் அணியால் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியவில்லை.

இதன் மூலம், 2-0 என முன்னிலை பெற்று போர்சுகள் அணியை ஜார்ஜியா அணி வீழ்த்தியது. இதனால் அடுத்த சுற்றான ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது ஜார்ஜியா அணி. ஏற்கனவே, போர்சுகள் அணி இந்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023