ஆஹா..! பிரபல யூடியூபர் இர்பான் திருமணம் முடிந்தது…குவியும் வாழ்த்துக்கள்.!!

உணவுகளை தேடி தேடி சாப்பிட்டு அந்த வீடியோக்களை தனது ‘இர்ஃபான்ஸ் வியூ ‘யூடியூப்’ சேனல் பக்கத்தில் வெளியிட்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இர்ஃபான். இவரது யூடியூப் சேனலை மட்டும் 3.56 மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

 இதன் மூலம் இவருக்கு பல விருதுகளும் கூட கிடைத்தது பல படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக லியோ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில்,   இர்பானுக்கு அவருடைய குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார்கள். அதன்படி,  திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் இர்ஃபான் மும்முரமாக இருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் இர்பானின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இவருடைய திருமணத்திற்கு முக்கிய சில பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இர்ஃபான் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பகிர்ந்த அவர் ” திருமதி. இர்ஃபானுடன் திருமணம் செய்துகொண்டேன். என் வாழ்க்கையின் அன்பு என் வாழ்நாளின் இறுதி வரை யாருக்காக என் இதயம் துடிக்கிறதோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன். எனது அடுத்த கட்ட வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தேவை எனது திருமண வீடியோவை விரைவில் பதிவேற்றுகிறேன் நண்பர்களே” என பதிவிட்டுள்ளார்.  இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by OFFICIAL PAGE (@irfansview.official)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.