பொங்கல் பரிசுத்தொகை: யார் யாருக்கு ரூ.1000 கிடையாது?

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் இவற்றை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சர்க்கரை அட்டைதாரர்கள்,  பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு..!

யார் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடையாது?

அதவாது, பொங்கலுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு கிடையாது.

வருமான வரி செலுத்துபவர்களுக்கு கிடையாது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு கிடையாது.

சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கிடையாது.

பொங்கல் பரிசுத்தொகை மற்றும் உரிமை தொகை

தற்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்ததோடு, பொங்கலுக்கு முன்னதாக அதாவது ஜனவரி 10-ம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கமாக 15ஆம் தேதி அனுப்பப்படும், மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு 10-ம் தேதி அன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.