கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சையளித்த டாக்டர் வீட்டில் போலீசார் ரெய்ட்!

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் வீட்டில் அந்நாட்டு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரரான டியாகோ மரடோனா, கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். 60 வயதான அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கட்டி காரணமாக அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த காரணமாக தனது வீட்டிற்கு திரும்பினார்.

அதனைதொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மரடோனா உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மரடோனாவின் மகள் குற்றம்சாட்டி வந்தார்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரான லியோ போல்டு வீட்டிலும், மரடோனாக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையிலும் அர்ஜென்டினா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் லியோ, மரடோனா உயிரிழந்ததில் எந்தொரு மர்மமும் இல்லையெனவும், ஒரு நண்பருக்கு சிகிச்சை அளிப்பதுபோல சிகிச்சை அளித்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இது தொடர்பான விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.