வரலாற்றில் இன்று(10.03.2020)… பல்துறை அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம் இன்று…

பாவலரேறு என்று தமிழக மக்களால் அன்போடும் உரிமையோடும் அழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும்.  இவருடைய பெற்றோர் துரைச்சாமி-குஞ்சம்மாள் ஆவர்.இவர் தனது தொடக்க கல்வியை சேலத்திலும்,பின்  ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே இவர்  புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகவும் ஈர்க்கப்பட்டார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை தனது வாழ்க்கை துனையாக  தேர்வு செய்துகொண்டார். தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு தேவநேய பாவாணர் ஆகியோரின் கொள்கை மக்களிடம் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். இவர், 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மக்களால்  வியந்து இன்றளவும் போற்றபடுகிறது. 1995-ஆம் ஆண்டு ஜுன் 11 ஆம்  நாளில் மரணம் அடைந்தார்.

author avatar
Kaliraj