தனிநபர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாற்றம் வணிகரீதியான கணக்குகள் மட்டும் தான், தனி நபர் கணக்குகளை பாதிக்காது, தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வணிக நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்க பேஸ்புக்கு நிறுவன தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் மட்டுமே, கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களுடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்வதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை தொடர்ந்து பயனர்களின் முடிவாகவே இருக்கும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ் அப் தகவல்களை பரிமாறும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. தனிநபர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தை புதிய கொள்கை பாதிக்காது என்றும் தேவைப்படுவோர் மட்டும் வணிக கணக்குகளுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.
பிப்ரவரி 8, முதல் நடைமுறைக்கு வரும் எனவும் வாட்ஸ் அப் அறிவித்திருந்தது. பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் தெரிவித்ததை அடுத்து வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ் அப்புக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…