கொரோனா எச்சரிக்கையில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது- பினராயி விஜயன்

கேரளாவில்கொரோனா எச்சரிக்கையில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று  1,169 பேருக்கு கொரோனா.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. ஆரம்பத்தில், நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தற்போது கொரோனாவை கையாளுவதில்  அனைவரும் கேரளாவைப் பாராட்டினர் என்று தெரிவித்தார் .

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 1,169 பேருக்கு கொரோனா அங்கு பாதித்தவர்களில் நேற்று மட்டும் 688 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 14,467 பேர் குணமடைந்தனர். தற்போது 11,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 82 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.