ஓடிடியில் வெளியாகும் மக்கள் செல்வனின் மாமனிதன்..!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாமனிதன் இந்த திரைப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைஞானி இளையராஜா இருவரும் சேர்ந்து இசை அமைத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை காயத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படமும் ஓடிடியில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடித்த க பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.