“அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!”- ஏஐசிடிஇ

அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தேர்ச்சி செய்தது யூஜிசி விதிகளுக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தேர்ச்சி செய்தது யூஜிசி விதிகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரி இறுதிப்பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்தவேண்டும் எனவும், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.