ஜனவரி 31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…!

மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை 6-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி முதல்  தொடங்க உள்ளது  எனவும் இந்த அமர்வு பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும் என கூறபடுகிறது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜனவரி 31 அன்று இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார். 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இம்முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிடலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறும் ஆண்டில் பட்ஜெட் இரண்டு முறை தாக்கல் செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதம் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. அதேநேரம், தேர்தலுக்குப் பிறகு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.