பான்-ஆதார் இணைப்பு… வருமான வரித்துறை வெளியிட்ட விளக்கம்.!

பான்-ஆதார் இணைப்பு குறித்து வருமான வரித்துறை ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக நேற்று ஜூன்30 ஆம் தேதியுடன் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் வருமான வரித்துறை ட்விட்டரில் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. ஆதார்-பான் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, செல்லானை பதிவிறக்குவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டன.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட ட்விட்டரில்,  பணம் செலுத்தப்பட்ட தகவலை ‘இ-பே டேக்ஸ்’ என்ற வருமான வரியின் முகவரியில் பார்க்கலாம், பணம் செலுத்தப்பட்டது வெற்றி என இருந்தால் பான்- ஆதார் இணைப்பை தொடரலாம். சலான் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும், PAN வைத்திருப்பவர் மின்னஞ்சல் முகவரிக்கு, வெற்றிகரமாகப் பணம் செலுத்திய ரசீது இணைக்கப்பட்ட நகலுடன் கூடிய செல்லான் அனுப்பப்படுகிறது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பிற்கான லிங்க் பெறப்பட்டும், இணைக்கப்படாத சில பயனர்களுக்கு முறையாக பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar