உடல் உறுப்பு தானம்! மருத்துவமனை மறுப்பு தெரிவிப்பது சட்டவிரோதம் – ஐகோர்ட் அதிருப்தி!

உடல் உறுப்பு தானம் செய்ய உறவினர்கள் அல்லாதோர் முன்வரும்போது மருத்துவமனைகள் மறுப்பு தெரிவிப்பது சட்டவிரோதம் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், உறவினர்கள் அல்லாதவர் உறுப்பு தானம் வழங்க முன்வரும் போது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மறுப்பது சட்ட விரோதம்.

இதனால் மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழு இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடையில்லா சான்று வழங்கக்கோரி மருத்துவர் காஜா மொய்தீன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடையில்லா சான்று வழங்கக்கோரி வழக்கில் மனுதாரர் மற்றும் மருத்துவக்குழு ஆஜராக வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. இதனிடையே, உடல் உறுப்பு தானம் செய்பவருக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்படும் என சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி, மூளைச்சாவு அடைந்தவரின், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், அந்த தகவலை உடனடியாக, அரசு மருத்துவமனை முதல்வர் அல்லது கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அலுவலர், மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

RELATED ARTICLES