இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!

தமிழகத்தில் 3 மணி வரை 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தது. 15ஆம் தேதிக்கு பிறகு படிபடியாக குறைந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மதியம் 3 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, குமரி, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு!

மேலும் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யவுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.